ADDED : ஆக 30, 2011 02:29 AM
வேடசந்தூர்:வேடசந்தூரில் ஒழுங்கு முறை விற்பனை கூட பணி, அடிக்கல் நாட்டு விழாவுடன் முடங்கியது.தி.மு.க., ஆட்சியில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முதல் நாள் இரவில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு அடிக்கல் நாட்டினர்.
சந்தைபேட்டையில் ஒரு ஏக்கரில் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.ஆட்சி மாற்றத்திற்கு பின், இப்பணி நின்று விட்டது. விவசாயிகளுக்கு உதவும் இத்திட்டம், அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது, இப்பகுதியினரின் கோரிக்கை.


