Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/156 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல் தஞ்சை விழாவில் அமைச்சர் பங்கேற்பு

156 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல் தஞ்சை விழாவில் அமைச்சர் பங்கேற்பு

156 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல் தஞ்சை விழாவில் அமைச்சர் பங்கேற்பு

156 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல் தஞ்சை விழாவில் அமைச்சர் பங்கேற்பு

ADDED : ஆக 21, 2011 02:19 AM


Google News

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

எம்.எல்.ஏ., ரெ ங்கசாமி முன்னிலை வகித்தார். திருவையாறு எம்.எல்.ஏ., ரெத்தினசாமி வாழ்த்தி பேசினார். ஒரத்தநாடு தாலுக்கா, தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்த 34 பயனாளிகளுக்கு 3.74 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையின் றி வழங்கப்படும் வீட்டு மனை பட்டாக்களையும், ஒரத்தநாடு, தஞ்சாவூர் மற்றும் பாபநாசம் வட்டங்களை சேர்ந்த 132 பயனாளிகளுக்கு 3.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையின்றி வழ ங்கப்படும் தையல் இயந்திரங்கள் என மொத்தம் 156 பயனாளிகளுக்கு ஏழு லட்சத்து 56 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கி பேசியதாவது: ஒரு மனிதனுக்கு உயிர் வாழ மிக முக்கியமான அடிப்படை தேவை உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் இருப்பிடம். இந்த மூன்று இன்றியமையாத தேவைகளையும் அனைத்து மக்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக வழங்கி வருகிறார். வீடற்ற அனைவருக்கு ஒரு சென்ட் நிலம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வீடற்ற அனைவருக்கும் விலையின்றி வழங்கப்படும் வீட்டு மனைபட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை மக்களின் பசி பிணியை போக்க 20 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவித்து வழங்கி கொண்டிருக்கிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை போன்ற நல்ல திட்டங்கள் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். பொருõளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் ஏற்றம் பெறுவதுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் எட்டாயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.



கலெக்டர் பாஸ்கரன் தலைமை வகித்து பேசுகையில், ''கடந்த மூன்றாண்டில் ரேஷன் கார்டுகள் கோரி 6,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்களை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும்,'' என்றார். எம்.எல்.ஏ., ரெங்கசாமி பேசுகையில், ''முதல்வர் ஜெயலலிதா சமூகத்தில் நலிந்தவர்கள், வாழ்வாதார வசதிகளற்றவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற அனைவருக்கும் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்,'' என்றார்.



எம்.எல்.ஏ., ரெத்தினசாமி பேசுகையில், ''மக்களுக்காக பல நல திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இல்லத்துக்கும் சென்று சேர வேண்டும் வாழ்த்துகிறேன்,'' என்றார்.

முன்னதாக டி.ஆர்.ஓ., சுர÷ஷ்குமார் வரவேற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆரிப்சாகிப், துணை கலெக்டர் பாலசுப்ரமணியன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜேம்ஸ்செல்லையா நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us