ADDED : ஆக 03, 2011 01:24 AM
அம்பத்தூர் : இருசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியை மீது, தனியார் ஏற்றுமதி நிறுவன பஸ் மோதியதில், அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
அம்பத்தூர் சோழாவரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாஸ்கரன்; ஐ.சி.எப்.,பில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா, 35; பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று காலை, கணவருடன் இருசக்கர வாகனத்தில், பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அம்பத்தூர் ஓ.டி., பஸ் நிலையம் அருகே, பின்னால், வந்த தனியார் ஏற்றுமதி நிறுவன பஸ், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், கீதா, பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பியோடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.


