அ.தி.மு.க., அமைச்சர் நன்றி தெரிவிப்பு
அ.தி.மு.க., அமைச்சர் நன்றி தெரிவிப்பு
அ.தி.மு.க., அமைச்சர் நன்றி தெரிவிப்பு
ADDED : ஆக 08, 2011 02:53 AM
கரூர்: கரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வீதி வீதியாக நடந்து சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் செந்தில் பாலாஜி, கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். போக்குவரத்துறை அமைச்சராக, அ.தி.மு.க., அமைச்சரவையில் இளம் அமைச்சராக பொறுப்பேற்றார். தன்னை வெற்றிப் பெறச் செய்த கரூர் தொகுதி மக்களுக்கு நேற்று நன்றி தெரிவித்தார். கரூர் நகராட்சி ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம், சின்னப்பா கார்னர் உட்பட 10 வார்டுகளிலும் நடந்தே சென்று மக்களுக்கு நன்றி கூறினார். அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். ஓட்டுக் கேட்டபோது வயதானவர்களின் கால்களில் விழுந்ததை போன்றே, நன்றி தெரிவிக்கும் போதும் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.


