ADDED : ஆக 19, 2011 03:38 AM
தாம்பரம்:தாம்பரம், சானடோரியம் அருகே பிளஸ் 1 மாணவன் ரயிலில் அடிபட்டு இறந்தார்.சானடோரியம், ஸ்டேஷன் ரோடு, ஜீவா தெருவை சேர்ந்தவர் குணசேகரன்.
இவரது மகன் கார்த்திக்ராஜா, 16. கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, கிரிக்கெட் விளையாடி விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார்.
ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சானடோரியம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு கார்த்திக்ராஜா இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


