ADDED : ஆக 09, 2011 01:19 AM
வடமதுரை : அய்யலூர் அருகே வேங்கனூர் சீகன் கரடு மலை உச்சியில் சங்கிலி கருப்பணசுவாமி, சப்த கன்னிமார், சங்கிலிமுருகன், முன்னடி கருப்பசாமி கோயில்கள் உள்ளன.
இங்கு உற்சவ திருவிழா நடந்தது. வேங்கனூர் கோயில் கிணற்றில் இருந்து வேல், தீர்த்தக்குடம் எடுத்து மலைக்கு அழைத்து வரப்பட்டது. கிடாக்கள் வெட்டி அன்னதானம் நடந்தது. அய்யலூர் பேரூராட்சி, சித்துவார்பட்டி, மோர்ப்பட்டி கிராமத்தினர் பங்கேற்றனர்.


