Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை மாவட்டத்தில் 20 லட்சம் சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் வழங்கும் பணி ஆரம்பம்

நெல்லை மாவட்டத்தில் 20 லட்சம் சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் வழங்கும் பணி ஆரம்பம்

நெல்லை மாவட்டத்தில் 20 லட்சம் சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் வழங்கும் பணி ஆரம்பம்

நெல்லை மாவட்டத்தில் 20 லட்சம் சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் வழங்கும் பணி ஆரம்பம்

ADDED : ஆக 11, 2011 02:20 AM


Google News

திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் பணி ஆரம்பமானது.

தமிழகத்தில் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஆசிரிய சங்கங்கள், பல்வேறு கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், பெற்றோர் உட்பட அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்த முதற்கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் அதிகாரிகளை தயார் நிலையில் இருக்க கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.



நெல்லை மாவட்டம்: >நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 314 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், 120 மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் 1 மற்றும் 6ம் வகுப்புகளை தவிர 1-8ம் வகுப்புகள் வரை சுமார் 2.75 லட்சம் மாணவர்கள், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளில் சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் உட்பட சுமார் 5 லட்சம் பேருக்கு சமச்சீர் கல்வி பாட முறை கற்றுத் தரப்படுகிறது.



3 மையங்களில் புத்தகங்கள்: இந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக நெல்லை கல்வி மாவட்டத்தில் பாளை மேரி சார்ஜென்ட் மேல்நிலைப் பள்ளி, தென்காசி கல்வி மாவட்டத்தில் ஐ.சி.ஐ பள்ளி, சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் அம்பை தீர்த்தபதி பள்ளி ஆகிய மையங்கள் தேர்வு செய்யப்பட்டு சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்ட சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர மண்டல பாட நூல் கழக நிறுவனத்திலும் பாட புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில பாட புத்தகங்கள் மாவட்டத்திற்கு வர வேண்டிய நிலையில் உள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவில் அதிகாரிகளின் உத்தரவு கிடைத்ததையடுத்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் பள்ளிகளுக்கு புத்தகங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று காலை முதல் ஒரு சில பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இப்புத்தகங்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.



16ம் தேதி முழு சப்ளை: >இன்று (11ம் தேதி) நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால் நாளை (12ம் தேதி) முதல் இப்பணி விறுவிறுப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் கடைசி அட்டையில் திருவள்ளுவர் மற்றும் கோவை செம்மொழி மாநாடு குறியீட்டை மறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் வரும் 16ம் தேதிதான் முழு அளவில் மாணவர்களுக்கு புத்தகங்கள் சப்ளை செய்யப்படுகிறது.



70 சதவீத புத்தகங்கள்: >இந்நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு மொத்த தேவையான புத்தகங்களில் 70 சதவீத புத்தகங்கள் மட்டுமே வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளுக்கு முழுமையான அளவில் புத்தகங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு தேவையான சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை முழுமையான அளவில் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



கட்டண கொள்ளை நீடிப்பு: மேலும், சமச்சீர் கல்வி பாடம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தனியார் மெட்ரிக் பள்ளிகள் கவலை அடைந்துள்ளன. அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சில பள்ளிகளில் ஏதாவது ஒரு வகையில் மாணவர்களிடம் கல்வி கட்டண கொள்ளையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் கல்வி கட்டண கொள்ளையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us