/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/48 காலனி நகராட்சி பள்ளி மேல்நிலையாக தரம் உயர்வு : தே.மு.தி.க., வேட்பாளர் பேட்டி48 காலனி நகராட்சி பள்ளி மேல்நிலையாக தரம் உயர்வு : தே.மு.தி.க., வேட்பாளர் பேட்டி
48 காலனி நகராட்சி பள்ளி மேல்நிலையாக தரம் உயர்வு : தே.மு.தி.க., வேட்பாளர் பேட்டி
48 காலனி நகராட்சி பள்ளி மேல்நிலையாக தரம் உயர்வு : தே.மு.தி.க., வேட்பாளர் பேட்டி
48 காலனி நகராட்சி பள்ளி மேல்நிலையாக தரம் உயர்வு : தே.மு.தி.க., வேட்பாளர் பேட்டி
ADDED : செப் 30, 2011 01:16 AM
சிவகங்கை : ''சிவகங்கை நகராட்சி 12 வது வார்டில் உள்ள 48 காலனி நகராட்சி பள்ளியை உயர்நிலையாகவும், அதை தொடர்ந்து மேல்நிலையாக தரம் உயர்த்த பாடுபடுவேன்,'' என, தே.மு.தி.க., வேட்பாளர் என்.சுரேஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வார்டில் அவசர கோலத்தில் அள்ளி தெளித்தது போல் போடப்பட்ட தார்ரோட்டை சீர்படுத்துவேன். அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வசதி செய்யப்படும். காவிரி குடிநீர் அனைத்து தெருக்களுக்கும் கிடைக்கசெய்வேன். தினமலர் நகர், சீதாலட்சுமி நகர், ஏஞ்சல் பள்ளி, காளியம்மன் கோயில் குடியிருப்பு பகுதிகளில் சீரான குடிநீர் கிடைக்க செய்வேன். 48 காலனியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலையாகவும், அதை தொடர்ந்து மேல்நிலையாக தரம் உயர்த்த பாடுபடுவேன்.தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கழிவு நீர் கால்வாய் கட்டப்படும். நகராட்சியில் ஊழலற்ற நேர்மையான தூய ஆட்சி நடக்க எனக்கு வாக்களிக்க வேண்டும். என்றார்.