Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/குடிநீருக்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எரிக்க முயற்சி

குடிநீருக்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எரிக்க முயற்சி

குடிநீருக்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எரிக்க முயற்சி

குடிநீருக்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எரிக்க முயற்சி

ADDED : செப் 10, 2011 11:53 AM


Google News

நாசிக்: சுத்தமான குடிநீரை வழங்க கோரி போராட்டம் நடத்திய கிராம மக்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை உயிருடன் எரித்து கொல்ல முயன்றனர்.

இச்சம்பவம் காரணமாக 16 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலம் அனந்தபூர் கிராமத்தில் சுத்தமான குடிநீர் வழங்க கோரி கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராம மக்களின் போராட்டத்தை கைவிடுவதற்காக நாசிக் மாவட்டத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரஞ்சித்குமார், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றார். ஆனால் கிராம மக்கள் கோபம் காரணமாக ஐ.ஏ.எஸ்.,அதிகாரியை உயிருடன் எரிக்க முயற்சித்தனர். இதனையடுத்து போலீசார் பாதுகாப்புடன் அவர் காப்பாற்றப்பட்டார். மேலும் ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us