ராலேகானில் அன்னாஹசாரே குழு கூட்டம்
ராலேகானில் அன்னாஹசாரே குழு கூட்டம்
ராலேகானில் அன்னாஹசாரே குழு கூட்டம்
ADDED : செப் 10, 2011 10:24 AM
புனே: மகாராஷ்டிரா மாநிலம் ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரே குழுவினர் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இரண்டு நாள் நடைபெற உள்ள இக் கூட்டத்தில் தேர்தல் நடைமுறையில் சீர் திருத்தம் கொண்டுவருவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்திற்கு கிரண் பேடி உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் வேட்பாளரை மாற்றுவது மற்றும் வேட்பாளைரை திரும்ப பெறுவது குறித்து மக்களுக்கு அதிகாரம் அளிப்து குறித்தும் வரும் 2014-ம் ஆண்டில்நடைபெறும் பொது தேர்தலில் போட்டியிடுபவர்களில் நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.


