ADDED : அக் 12, 2011 12:51 AM
புதுச்சேரி : புதுச்சேரி ரோட்டரி சங்கம், மத்திய அரசு ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் தீபக் ஆர்த்தோ மையத்தில் நடந்தது.
சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை கவர்னர் சிவராஜ் முகாமை துவக்கி வைத்தார். சர்வதேச சேவை இயக்குனர் கஸ்பார் முத்தப்பா, சமுதாய சேவை இயக்குனர் டாக்டர் தீனூகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மருத்துவ ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரி, புதுச்சேரி அரசு மருத்துவமனை முடநீக்கியல் டாக்டர் முத்தையன் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் உடற் பரிசோதனை, எலும்பு மற்றும் மூட்டுவலி, சர்க்கரை வியாதி போன்றவைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் வில்லியனூர் கோன்சகா முதியோர் இல்லம், அரியாங்குப்பம் தூய அன்னை முதியோர் இல்லம், அன்னை அல்போன்சா முதியோர் இல்லங்களை சேர்ந்தவர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


