/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுயஉதவிக்குழு பயிற்சி கட்டடம் செயல்பாட்டுக்கு வர கோரிக்கைசுயஉதவிக்குழு பயிற்சி கட்டடம் செயல்பாட்டுக்கு வர கோரிக்கை
சுயஉதவிக்குழு பயிற்சி கட்டடம் செயல்பாட்டுக்கு வர கோரிக்கை
சுயஉதவிக்குழு பயிற்சி கட்டடம் செயல்பாட்டுக்கு வர கோரிக்கை
சுயஉதவிக்குழு பயிற்சி கட்டடம் செயல்பாட்டுக்கு வர கோரிக்கை
ADDED : ஜூலை 28, 2011 09:27 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சியில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பயிற்சி கட்டடம் பூட்டியே கிடக்கிறது.வடபுதூர் ஊராட்சியில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, மகளிர் சுய உதவிக்குழுவிற்கு பயிற்சி அளிக்கும் வகையில், கட்டடம் கட்டப்பட்டது.
அங்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, எவ்வித பயிற்சியும் அளிக்காமல் கட்டடம் பூட்டப்பட்டுள்ளது. தற்போது இக்கட்டடத்தை சுற்றிலும் முட்புதர்கள் அடர்ந்து பயனில்லாமல் உள்ளது. இதனால் கட்டடம் சேதம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. மீண்டும் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றுள் ளது. இவ்வூராட்சியின் தலைவரும் அ.தி.மு.க., வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டடத்தில் மீண்டும் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளித்தும், சுய உதவிக்குழுக்கள் பயன்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


