Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டாக்டர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்

டாக்டர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்

டாக்டர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்

டாக்டர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்

ADDED : ஆக 03, 2011 12:57 AM


Google News

சென்னை : 'அலோபதி டாக்டர்கள் உரிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்' என, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை: போலி டாக்டர்களை ஒழிக்க, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அலோபதி டாக்டர்கள், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழங்கும் அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. டாக்டர்கள் சிலர், அடையாள அட்டை பெற இன்னும் விண்ணப்பிக்கவில்லை. இன்னும் பலர், தங்களது பழைய அடையாள அட்டையைப் புதுப்பிக்கவில்லை. இவர்கள், உடனே விண்ணப்பித்து புதிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

முகவரி மாறியிருந்தால் அதுபற்றியும் மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவித்து, புதிய முகவரியை பதிவு செய்ய வேண்டும். இதற்குரிய விண்ணப்பத்தை, சுய விலாசமிட்டு, 10 ரூபாய் தபால் தலை ஒட்டிய கவரை பதிவாளருக்கு அனுப்பி, பெறலாம். மேலும், விவரங்களுக்கு 044-24727603 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us