/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : ஜூலை 21, 2011 12:48 AM
திருப்பூர் : பனியன், டையிங், பிரின்டிங் மற்றும் பொது தொழிலாளர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம், திருப்பூரில் நடந்தது; சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார்.'மூடப்பட்டுள்ள சாய ஆலைகளை திறக்கும் நடவடிக்கை, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது, மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இத்தொழிலை நம்பி வந்தவர்கள், சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வது, அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொழிலை வெளியூர்களுக்கு இட மாற்றம் செய்தும் வருகின்றனர். லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை கருத்தில் கொண்டு, தொழில் அமைப்புகளுடனும், விவசாய பிரதிநிதிகளுடனும் பேசி தீர்வு காண முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும்.'உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்; 'வாட்' வரி விதிப்பு சாதாரண ஏழை மக்களை துன்பத்துக்கு இட்டுச் சென்றுள்ளது. இதற்கு வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இவ்வரி உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும்; பவர் பத்திரப்பதிவு கட்டணத்தை 10 மடங்காக அரசு உயர்த்தி, அமல்படுத்தி உள்ளது. இதை திரும்ப பெற வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


