/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஹெச்.ஐ.வி., பாதித்த பெண்குழந்தைகளுடன் தீக்குளிப்புசிறுவன் தீயில் கருகி பலிஹெச்.ஐ.வி., பாதித்த பெண்குழந்தைகளுடன் தீக்குளிப்புசிறுவன் தீயில் கருகி பலி
ஹெச்.ஐ.வி., பாதித்த பெண்குழந்தைகளுடன் தீக்குளிப்புசிறுவன் தீயில் கருகி பலி
ஹெச்.ஐ.வி., பாதித்த பெண்குழந்தைகளுடன் தீக்குளிப்புசிறுவன் தீயில் கருகி பலி
ஹெச்.ஐ.வி., பாதித்த பெண்குழந்தைகளுடன் தீக்குளிப்புசிறுவன் தீயில் கருகி பலி
ADDED : செப் 12, 2011 02:19 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே, ஹெச்.ஐ.வி., பாதித்த பெண் மனமுடைந்த தனது இரு
குழந்தைகளுடன் நேற்று தீக்குளித்தார். இதில், ஒரு சிறுவன் தீயில் கருகி
பலியானார்.
தர்மபுரி அடுத்த பொம்மிடி வாசிக்கவுண்டனூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான
முருகன் ஹெச்.ஐ.வி., பாதிப்பால் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை
செய்துகொண்டார். இவரது மனைவி சித்ரா (25) ஹெச்.ஐ.வி., பாதிப்புடன்
குழந்தைகள் சரண் (7), விஜய் (3) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று சித்ரா தனது இரு குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி
தீவைத்து விட்டு அவரும் தீக்குளித்தார். சரண் தீயில் கருகி இறந்தார்.
பலத்த தீக்காயங்களுடன் சித்ரா சேலம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். விஜய் மீது மண்ணெண்ணெய் சரியாக ஊற்றாததால், தீ
விபத்திலிருந்து தப்பியுள்ளார். இது குறித்து பொம்மிடி போலீஸார்
விசாரிக்கின்றனர்.


