/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மக்கள் நலப் பணியாளர்களுக்கு கோலியனூரில் பயிற்சி முகாம்மக்கள் நலப் பணியாளர்களுக்கு கோலியனூரில் பயிற்சி முகாம்
மக்கள் நலப் பணியாளர்களுக்கு கோலியனூரில் பயிற்சி முகாம்
மக்கள் நலப் பணியாளர்களுக்கு கோலியனூரில் பயிற்சி முகாம்
மக்கள் நலப் பணியாளர்களுக்கு கோலியனூரில் பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 27, 2011 11:31 PM
விழுப்புரம் : கோலியனூர் ஒன்றிய மக்கள் நலப் பணியாளர்களுக்கு பிற்படுத்தப்பட்ட மண்டல மான்ய திட்ட நிதிக் குறித்து பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.முகாமிற்கு மாநில ஊரக பயிற்சி நிறுவன பயிற்றுனர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய சேர்மன் பிரசன்னதேவி செல்வகுமார் பயிற்சியை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி பி.டி.ஓ., மாணிக்கம் முன்னிலை வகித்தார். கிராம ஊராட்சி பி.டி.ஓ., ஜெயபாலன் வரவேற்றார். இதில் பஞ்சாயத்து ராஜ் அரசு திட்டங்கள், சுற்றுச் சூழல், எச்.ஐ.வி., விழிப்புணர்வு, முழுச் சுகாதாரம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ் நன்றி கூறினார்.


