ADDED : ஜூலை 13, 2011 02:49 AM
சாத்தூர்: ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க சாத்தூர் கிளை மாநாடு சாத்தூர்
ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
வட்ட கிளை தலைவர் கே.கோபால்
தலைமை வகித்தார். சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி முன்னிலை
வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சேவியர், மாவட்ட பொருளா ளர் புகழேந்தி
பேசினர். கிளையின் புதிய தலைவராக சீனிவான்,செயலாளராக ராமமூர்த்தி,
பொருளாளராக கண்ணன், இணை செயலாளராக சிவக்குமார், துணை தலைவராக கிருஷ்ணன்,
செயற்குழு உறுப்பினர்களாக சுதாகர், கோபால், சுப்பாரெட்டி தேர்வாகினர்.


