/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை வந்தாச்சுஉழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை வந்தாச்சு
உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை வந்தாச்சு
உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை வந்தாச்சு
உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை வந்தாச்சு
ADDED : செப் 20, 2011 01:10 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில் 62 ஆயிரத்து 306 பேருக்கான உழவர்
பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியை
சப்-கலெக்டர் துவக்கி வைத்தார்.
பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள விவசாயிகளுக்கு
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை
வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அதை சமூக பாதுகாப்பு
திட்டமாக மாற்றப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க.,
ஆட்சிக்கு வந்துள்ளதால், சமூக பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை மீண்டும்
உழவர் பாதுகாப்பு திட்டமாக மாற்றப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி தாலுகாவிலுள்ள விவசாயிகளுக்கான அடையாள அட்டைகள்
தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் நேற்று
ஒப்படைக்கப்பட்டது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் அருண்சுந்தர் தயாளன், உழவர்
பாதுகாப்பு திட்ட அடையாள அட்டையை வி.ஏ.ஓ.,க்களிடம் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் சாகுல்அமீது, சமூக பாதுகாப்பு திட்ட
தனித்தாசில்தார் சுகுமாரி, மண்டல துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'சமூக பாதுகாப்பு திட்டத்தில் கோவை மாவட்டத்தில்
ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 147 பேர் பயனாளிகளாக இருந்தனர். தற்போது
அவர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் சலுகைகள், மானியங்களை,
நலத்திட்டங்களை விவசாயிகள் இந்த அட்டைகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தில், கோவை வடக்கு தாலுகாவில் 14 ஆயிரத்து 226
பயனாளிகளுக்கும், தெற்கு தாலுகாவில் 20 ஆயிரத்து 608 பயனாளிகளுக்கும்,
மேட்டுப்பாளையம் தாலுகாவில் 14 ஆயிரத்து 332 பயனாளிகளுக்கும், சூலூர்
தாலுகாவில் 8,675 பயனாளிகளுக்கும், பொள்ளாச்சி தாலுகாவில் 62 ஆயிரத்து 306
பயனாளிகளுக்கும் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைகள் கிராம
நிர்வாக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள்
சத்துணவு அமைப்பாளர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் மூலம் பயனாளிகளுக்கு
வழங்கும் பணியை துவங்கியுள்ளனர். சமூக பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை
வைத்திருப்பவர்களுக்கு, புதுப்பிக்கப்பட்ட உழவர் பாதுகாப்பு திட்ட அடை யாள
அட்டை கிடைக்காவிட்டால் உடனடியாக கிராம நிர்வாக அலுவலரை அணுக வேண்டும்.
இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.


