/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ராணுவ வீரர் வீட்டில் 44 பவுன் நகை திருட்டுராணுவ வீரர் வீட்டில் 44 பவுன் நகை திருட்டு
ராணுவ வீரர் வீட்டில் 44 பவுன் நகை திருட்டு
ராணுவ வீரர் வீட்டில் 44 பவுன் நகை திருட்டு
ராணுவ வீரர் வீட்டில் 44 பவுன் நகை திருட்டு
ADDED : ஜூலை 14, 2011 02:04 AM
கோவை : முன்னாள் ராணுவ அதிகாரியின் வீட்டை உடைத்து 44 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபா# ரொக்கமும் நேற்று திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவைப்புதூரை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி பால்ராஜ் (60), இவரது மனைவி சுசிலா(55). இருவரும் உடல் பரிசோதனைக்காக ரெட்பீல்ட்ஸ் ராணுவ மருத்துவமனைக்கு நேற்று காலை சென்றனர். நேற்று மாலை வீட்டுக்கு திரும்பிய போது, பூட்டிய வீடு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 44 பவுன் தங்க நகைகளும், ஒரு லட்சம் ரூபா# ரொக்கப்பணமும் திருடப்பட்டு இருந்தது. போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் வந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


