/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கடையநல்லூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்கடையநல்லூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்
கடையநல்லூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்
கடையநல்லூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்
கடையநல்லூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்
ADDED : ஜூலை 28, 2011 01:47 AM
கடையநல்லூர் : கடையநல்லூர் மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தோப்புகளில் காட்டு யானைகள் புகுந்ததால் 500க்கும் மேற்பட்ட வாழைகள், நூற்றுக்கணக்கான தென்னைகள் சேதமடைந்தன.
இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.கடையநல்லூருக்கு மேற்கே அமைந்துள்ள மலைப்பகுதியில் மான், மிளா, யானை, காட்டு பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய தோப்புகளில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, வாழை, நெல் பயிர் வகைகளை சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் நிலங்களை பாதுகாக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்து மின்வேலிகள் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட போதிலும் பெருமளவில் செயல் இழந்து கிடக்கின்றன.
இந்நிலையில் கடையநல்லூர் மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களுக்குள் நேற்று முன்தினம் இரவு யானை கூட்டங்கள் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்கள், வாழைகள் போன்றவைற்றை சேதப்படுத்தி சென்றதாக விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், 500க்கும் மேற்பட்ட வாழைகள் யானை கூட்டங்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.தாடர்ந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் வனவிலங்களிடமிருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


