/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"புதுமை படைப்புகளே வாடிக்கையாளர்களை ஆளுகின்றன'"புதுமை படைப்புகளே வாடிக்கையாளர்களை ஆளுகின்றன'
"புதுமை படைப்புகளே வாடிக்கையாளர்களை ஆளுகின்றன'
"புதுமை படைப்புகளே வாடிக்கையாளர்களை ஆளுகின்றன'
"புதுமை படைப்புகளே வாடிக்கையாளர்களை ஆளுகின்றன'
ADDED : ஆக 03, 2011 01:17 AM
கோவை : 'உலகளாவிய உற்பத்தியியல் மற்றும் மேலாண்மையியல்' எனும் தலைப்பில், தெற்காசிய முதல் சர்வதேச அளவிலான கருத்தரங்கு சி.ஐ.டி., கல்லூரியில் நேற்றுமுன்தினம் துவங்கியது; இன்று நிறைவடைகிறது.
சி.ஐ.டி., கல்லூரியின் 'முன்னேற்றங்கள் ஒருங்கிணைந்த உற்பத்தியியல் மற்றும் மேலாண்மையியல் ஆராய்ச்சி குழு' அமெரிக்க சால்டான் தொழிலியல் கல்லூரியிலுள்ள தொழில்சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கருத்தரங்கு நடக்கிறது. மேனுபேச்சரிங் ஆடோமேஷன், மெட்டீரியல் சயின்ஸ், இன்ஜினியரிங் டிசைன் உள்ளிட்ட எட்டு அமர்வுகளாக நடக்கின்றன. இதில், 400 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டு, 80 படைப்புகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. கல்லூரி முதல்வர் செல்லதுரை வரவேற்றார். தாளாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். டாடா கன்சல்டன்சி சேவை நிறுவனத்தின் சர்வதேச உற்பத்தியியல் தலைவர் ஹரிஸ் மெக்ரா தலைமை வகித்து பேசியது: வாடிக்கையாளரின் தேவைகள் அதிகரித்து வரும் சூழலில், உற்பத்தி மற்றும் மேலாண்மை சார்ந்த நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பொருட்களின் தர அடிப்படையிலேயே வாடிக்கையாளர்கள் நல்ல நிறுவனங்களை நாடுகின்றனர். ஒரு பொருளின் மூலப்பொருள் ஒரு தேசத்திலும், வடிவமைப்பு மற்றும் விற்பனை மற்றொரு நாட்டிலும் நடந்து வருகிறது. இதுவே சர்வதேச உற்பத்தியியல் மற்றும் மேலாண்மையியல் ஏற்பட்டுள்ள எழுச்சி எனலாம். புதுமையான படைப்புகளை வெளிப்படுத்தும்போது, அவற்றின் பயன்பாடு அதிகரித்து உற்பத்தியும் பெருகும். மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்களை பயன்படுத்தும், இயந்திரமயமாக்கல் முறை உயர் நிறுவனங்களில் காணப்படுகிறது. இதனால், பொருளின் உண்மைத்தன்மையும், தரமும் மேம்படுத்தப்பட்டு வாடிக்கையாளரிடம் ஆளுமையை அதிகரிக்கும்.நிறுவனங்களிடம் நிலவும் இயந்திரமயமாக்கல் முறை, பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் தான் விரும்பும் பொருளுக்கு, நிறுவனங்களிடையே டிமாண்ட் வைக்கின்றனர். இதற்கு காரணம், எதிர்கால தேவைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காணும் தொழில்நுட்ப வளர்ச்சியே. அறிவுப்பூர்வ மேலாண்மையால் பொருட்களின் உற்பத்தி பெருகிவரும் நிலையில், உற்பத்தியியல் மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமான ஒன்று, என்றார். இன்று,சர்வதேச ஆராய்ச்சி பத்திரிகைகளில் ஆராய்ச்சி கட்டுரைகள் உருவாக்குதல் மற்றும் வெளியிடுதல் எனும் தலைப்பில், சர்வதேச ஆராய்ச்சி பத்திரிகைகளின் முதன்மை கோப்பாளர்களை கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. கல்லூரி செயலாளர் பிரபாகர், அமெரிக்க மேஸ்சுட்ஸ் பல்கலை பேராசிரியர் குணசேகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.


