வருமான வரித்துறை கமிஷனர் உட்பட 4 அதிகாரிகள் கைது
வருமான வரித்துறை கமிஷனர் உட்பட 4 அதிகாரிகள் கைது
வருமான வரித்துறை கமிஷனர் உட்பட 4 அதிகாரிகள் கைது
ADDED : செப் 28, 2011 01:21 AM
புதுடில்லி:வருமான வரித்துறை கமிஷனர் உள்ளிட்ட, 4 அரசு அதிகாரிகளை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.ஆக்ராவைச் சேர்ந்த ஹோமி ராஜ்வனாஸ், கடந்த 2005ம் ஆண்டில், 'இந்திய தேசிய விவசாயக் கூட்டுறவு வாணிபக் கூட்டமைப்பின்' நிர்வாக இயக்குனராகப் பணியாற்றினார்.அவர், தனது பதவிக் காலத்தின் போது, விவசாயம் சார்ந்த நிறுவனங்களுக்கு, முறைகேடாகக் கடனுதவி வழங்கியதாகப் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.இதனையடுத்து, தற்போது, வருமான வரித்துறை கமிஷனராக உள்ள ஹோமி ராஜ்வனாஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் 4 பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.