ADDED : ஆக 25, 2011 11:18 PM
வால்பாறை : பணி நீக்க காலத்தில் இறந்த சாலைப்பணியாளர்கள் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் வால்பாறை உட்கோட்டத்தின் சார்பில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கூட்டுறவுக்கடனுக்கான அபராத வட்டியை ரத்து செய்ய வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்த சாலைப்பணியாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு கருவூலத்தின் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


