/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/நெருஞ்சிக்குடி ஐயனார் கோயிலில் கும்பாபிஷேகம்நெருஞ்சிக்குடி ஐயனார் கோயிலில் கும்பாபிஷேகம்
நெருஞ்சிக்குடி ஐயனார் கோயிலில் கும்பாபிஷேகம்
நெருஞ்சிக்குடி ஐயனார் கோயிலில் கும்பாபிஷேகம்
நெருஞ்சிக்குடி ஐயனார் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 03, 2011 12:35 AM
காளையார்கோவில் : காளையார்கோவில் அருகேயுள்ள நெருஞ்சிக்குடி ஐயனார் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவில் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேக விழா கடந்த ஆக.31ம் தேதி அனுக்ஞை,விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்கியது. ராம ஹரிஹரன் சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை,சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும், 9.40 க்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடும், 10 மணிக்கு ராஜ கோபுர கலசத்திலும்,சிரவசையுடைய ஐயனார், பூரணபுஷ்களைதேவி, விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, பெரியகருப்பர், ராக்கச்சி அம்மன்,பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றினர். பக்த்தர்கள் 'சிவசிவ' 'அரோஹரா' என ஆரவாரத்துடன் கோஷமிட்டனர்.பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஆ.கருங்குளம் ஊராட்சிதலைவர் மல்லிகா, விழாகுழு தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். தேவகோட்டை தீயணைப்பு துறையினர், கல்லல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.செயலாக்க நிர்வாக குழுவினர்,நெருஞ்சிகுடியான் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


