ADDED : ஆக 09, 2011 01:34 AM
மதுரை : மதுரையில் நகர் ம.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அவை தலைவர் சின்னசெல்லம் தலைமை வகித்தார். செயலாளர் பூமிநாதன், மாநில தொழிற்சங்க செயலாளர் மகபூப்ஜான், பொருளாளர் சுப்பையா, நிர்வாகிகள் மனோகரன், சுருதி ரமேஷ் பங்கேற்றனர். பெரியாறு அணையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து ஆக. 17ல் மதுரை காளவாசலில் பொதுச் செயலாளர் வைகோ நடத்தும் உண்ணாவிரதத்தில் திரளாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.


