இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சா பறிமுதல் :இலங்கையர் உட்பட ஆறு பேர் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சா பறிமுதல் :இலங்கையர் உட்பட ஆறு பேர் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சா பறிமுதல் :இலங்கையர் உட்பட ஆறு பேர் கைது
ADDED : ஆக 09, 2011 02:28 AM

ராமேஸ்வரம் : இலங்கைக்கு கடத்துவதற்காக திருச்சியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்திற்கு ஆம்னிவேனில் கடத்தி பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த இலங்கையர் உட்பட 6 பேர் கைதாகினர்.தங்கச்சிமடம் தெரசாள் சர்ச் அருகே உள்ள போலீஸ் செக்போஸ்டில் இன்ஸ்பெக்டர் செய்யது ஹலிமுல்லா, எஸ்.ஐ., நடராஜன், லெட்சுமணன் மற்றும் போலீசார் பணியிலிருந்தனர்.
நேற்று அதிகாலை 3 மணிக்கு ராமேஸ்வரம் நோக்கி வேகமாக சென்ற ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 40 கிலோ கஞ்சா, ஆயிரத்து 800 பாக்கெட் ஜரிதா புகையிலை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். வேனில் மறைத்து வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை கைப்பற்றினர். வேனில் இருந்த திருச்சி திருவானைக்காவல் சக்திநகரை சேர்ந்த வேன் டிரைவர் நோவாதாமஸ்(20), சரவணன்(22), தில்லைநகர் சேது(56), இலங்கை கொழும்பு கதிரேசன் தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜன்(54) மற்றும் பாம்பன் பிரான்சிஸ் நகரை சேர்ந்த பிரைட்டன்(32), விஜின்(30) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம், ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மணிவண்ணன் விசாரணை நடத்தினார். கொழும்புவில் கடைகளுக்கு பேன்சி பொருட்களை மொத்தமாக சப்ளை செய்து வருபவர் சுந்தர்ராஜன். திருச்சி வந்த இவர் திருச்சியை சேர்ந்தவர்களின் உதவியுடன் கஞ்சா, புகையிலையை இலங்கைக்கு கடத்துவதற்காக வேனில் ராமேஸ்வரம் கொண்டு வந்துள்ளார். பாம்பன் மீனவர்கள் சிலர் உதவியுடன் படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றபோது பிடிப்பட்டனர். என தெரியவந்தது. மேலும் பலமுறை பாம்பன் குந்துகால் கடற்கரையிலிருந்து படகில் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இலங்கைக்கு கடத்தி செல்ல ராமேஸ்வரம் கடற்கரையில் தயாராக இருந்த படகு குறித்தும் விசாரித்து வருகின்றனர்.தமிழகத்தில் ஒரு கிலோ கஞ்சா விலை 8,000, புகையிலை பாக்கெட் 6 ரூபாய். இவை இலங்கையில் முறையே 50 ஆயிரம், 50 ரூபாய்க்கு விற்கப்படுவதால், அதிக லாபம் கருதி இங்கிருந்து கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.


