ADDED : செப் 28, 2011 01:18 AM
மதுரை : மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி வைஸ்மேன் பராக்சி நிறுவன
மேலாளர் சந்திரசேகரன் 45.
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர்
சிராஜூதீன் 35. இவர் நேற்று மாட்டுத்தாவணி அருகே ஒரு ஓட்டலில்
தங்கியிருந்தார். இவர் வெளிநாடு செல்வதாகக்கூறி 2000 அமெரிக்க டாலர், 1700
சிங்கப்பூர் டாலர்களை சந்திரசேகரனிடம் வாங்கினார். இவற்றின் இந்திய
மதிப்பு 1 லட்சத்து 64 ஆயிரத்து 510 ரூபாய். பணத்தை கீழே
வைத்திருப்பதாகவும், அதை எடுத்துவருவதாகவும் கூறிச் சென்ற சிராஜூதீன்
மாயமானார். புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.