/உள்ளூர் செய்திகள்/மதுரை/பாரம்பரிய பெருமையை அடுத்த தலைமுறைக்கு தரவேண்டும்: கருத்தரங்கில் தகவல்பாரம்பரிய பெருமையை அடுத்த தலைமுறைக்கு தரவேண்டும்: கருத்தரங்கில் தகவல்
பாரம்பரிய பெருமையை அடுத்த தலைமுறைக்கு தரவேண்டும்: கருத்தரங்கில் தகவல்
பாரம்பரிய பெருமையை அடுத்த தலைமுறைக்கு தரவேண்டும்: கருத்தரங்கில் தகவல்
பாரம்பரிய பெருமையை அடுத்த தலைமுறைக்கு தரவேண்டும்: கருத்தரங்கில் தகவல்
ADDED : ஜூலை 24, 2011 11:49 PM
மதுரை : ''மதுரையின் பாரம்பரிய பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்,'' என கருத்தரங்கில் பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசினார்.
மதுரையில் தமிழக தொல்லியல் கழக இரண்டு நாள் கருத்தரங்கு நேற்று துவங்கியது. துவக்க விழாவில் ஆவண இதழ் வெளியிடப்பட்டது. பாண்டியநாட்டு வரலாற்று பேரவை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு தொல்லியல் கழக தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். சாந்தலிங்கம் வரவேற்றார். ஆவண இதழை வெளியிட்ட பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசுகையில், ''நம்நாட்டு பெருமைகளை தொல்லியல் துறை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். மதுரை நகரம் எத்தனையோ வரலாற்று பெருமைகளைக் கொண்டது. இதை இன்றைய இளைஞர்களிடம் எடுத்துக் கூறி, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும். சுற்றுலா பாரம்பரியமிக்க தலங்களில், அவற்றின் வரலாற்றை பிரபலமானவர்களின் குரலின் பின்னணியில், ஒலி, ஒளிகாட்சிகளை அமைத்து செயல்படுத்தலாம்,'' என்றார்.
தஞ்சை தொல்லியல்துறை பேராசிரியர் ராமசுந்தரம் பேசுகையில், ''ஆவணங்களாக கருதப்படும் ஓலைச்சுவடிகளில் கூட புனைந்துரைகள் இருக்கும். ஆனால் கல்விவெட்டில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. தமிழ்மொழியின் இலக்கணம் இன்று தேவைப்படுகிறது. அதற்கு தொல்லியல் துறை கல்வெட்டின் துணைகொண்டு எழுதலாம்,'' என்றார். பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல் இயக்குனர் வாசுதேவன், மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் வெங்கட்ராமன், புதுச்சேரி பேராசிரியர் சுப்பராயலு உட்பட பலர் பேசினர். தொல்லியல் கழக செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார். தொடர்ந்து பலர் கட்டுரைகள் வாசித்தனர்.


