Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தேசிய இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : ஜூலை 26, 2011 10:43 PM


Google News

கடலூர் : விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் விருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் நாள் விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை செய்து வரும் இளைஞர்களுக்கும் (13 வயது முதல் 25 வயது வரையிலான) மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

1.4.2010 முதல் 31.2.2011 வரையிலான காலத்திற்கு செய்த இளைஞர் நலப்பணிகளுக்காக விருதுகள் இந்த நிதியாண்டில் வழங்கப்படவுள்ளது.



இளைஞர் (தனிநபர்) குறிப்பிட்டுள்ள நிதியாண்டில் வயது 13லிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டு செய்திருக்க வேண்டும். தேர்வு செய்பவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பட்டயம், பதக்கம் 10 நபர்களுக்கு மட்டும் (மாநில அளவில்) வழங்கப்படும். தன்னார்வ தொண்டு நிறுவனம், சங்க பதிவு சட்டத்தின்படி தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட ஜாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. இதற்கு முன் இவ்விருது பெற்ற தொண்டு நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கம், பட்டயம், வெற்றிச்சின்னம், 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டும் (மாநில அளவில்). இதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்து 31.7.2011க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us