/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை மாநகராட்சி எஸ்.சி.எஸ்.டி ஊழியர் நலச்சங்க இரு பெரும் விழாநெல்லை மாநகராட்சி எஸ்.சி.எஸ்.டி ஊழியர் நலச்சங்க இரு பெரும் விழா
நெல்லை மாநகராட்சி எஸ்.சி.எஸ்.டி ஊழியர் நலச்சங்க இரு பெரும் விழா
நெல்லை மாநகராட்சி எஸ்.சி.எஸ்.டி ஊழியர் நலச்சங்க இரு பெரும் விழா
நெல்லை மாநகராட்சி எஸ்.சி.எஸ்.டி ஊழியர் நலச்சங்க இரு பெரும் விழா
திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி எஸ்.சி.எஸ்.டி.ஊழியர் நலச்சங்கம் சார்பில் இளையபெருமாளுக்கு பணிநிறைவு பாராட்டு விழா, நல்லம்மாள்புரம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி தலித் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா வண்ணார்பேட்டையில் நடந்தது.நெல்லை மாநகராட்சி எஸ்.சி.எஸ்.டி.ஊழியர் நலச்சங்க தலைவர் பட்டன் தலைமை வகித்தார்.
நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் எஸ்.சி.எஸ்.டி.ஊழியர்களுக்கான குறைதீர்க்கும் பிரிவு அமைக்கவேண்டும். ஊழியர் நலச்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். நெல்லையில் காலியாகவுள்ள 250க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர் பணியிடங்களை 5 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தில் பணிபுரியும் சுனாமி துப்புரவு பணியாளர்களை கொண்டு நிரப்பவேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி காத்திருக்கும் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.எஸ்.சி.எஸ்.டி.ஊழியர் நலச்சங்க பொதுச் செயலாளர் முத்துசாமி, பொருளாளர் பொன்னுச்சாமி, அம்பேத்கர் மிஷன் முத்தையா, சிவந்தி பொற்செழியன், அம்சா, அகில இந்திய ரயில்வே ஊழியர் சங்கம் கிளை தலைவர் செல்லையா, முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு உட்பட பலர் பேசினர்.நெல்லை மாநகராட்சி எஸ்.சி.எஸ்.டி.ஊழியர் நலச்சங்க பொருளாளர் பால்பாண்டி நன்றி கூறினார்.


