/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆவணங்களை தமிழில் தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை அனுமதி : வக்கீல்கள் போராட்டம் வாபஸ்ஆவணங்களை தமிழில் தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை அனுமதி : வக்கீல்கள் போராட்டம் வாபஸ்
ஆவணங்களை தமிழில் தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை அனுமதி : வக்கீல்கள் போராட்டம் வாபஸ்
ஆவணங்களை தமிழில் தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை அனுமதி : வக்கீல்கள் போராட்டம் வாபஸ்
ஆவணங்களை தமிழில் தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை அனுமதி : வக்கீல்கள் போராட்டம் வாபஸ்
ADDED : ஜூலை 29, 2011 01:44 AM
மதுரை : மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குகளை தாக்கல் செய்யும் போது, கூடுதல் ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தலைமை நீதிபதி யூசுப் இக்பால் உத்தரவிட்டார்.
இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை நீதிபதி உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும் மனு செய்தனர்.
இதுகுறித்து நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் கொண்ட பெஞ்ச், தானாவே மனுவை வழக்காக கருதி, விசாரணைக்கு எடுத்தது. வக்கீல் சங்க நிர்வாகிகள், தமிழில் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதை ஏற்று கொண்ட பெஞ்ச், கூடுதல் ஆவணங்களை தமிழில் தாக்கல் செய்யலாம் என அனுமதி வழங்கியது. அதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்த வக்கீல்கள் இன்று முதல் பணிக்கு திரும்புவதாக அறிவித்தனர்.


