/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
ADDED : ஜூலை 31, 2011 01:13 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை சார்பில் ''ஓரியன்டேஷன் புரோகிராம் இன் மேத்தமட்டிக்ஸ்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கத்துக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) பாகிரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கல்லூரி ஆலோசகர் டாக்டர் ராமமீனாட்சி வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக கணிதத்துறை தலைவர் உமாமகேஸ்வரி வரவேற்றார். முடிவில் விரிவுரையாளர் செந்தமிழ்செல்வி நன்றி கூறினார்.


