ADDED : ஆக 11, 2011 12:55 AM
வத்தலக்குண்டு : நத்தம் அருகே புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் ராஜா (23), விவேக் ( 23), ஆனந்த் (23).
மே 21 ல், திருநெல்வேலிக்கு சென்றனர். அங்கிருந்து வாடகை காரில் கொடைக்கானல் வந்தனர். வத்தலக்குண்டு பங்களாபட்டி பிரிவு அருகே, டிரைவர் ஆனந்தசேகரை தாக்கி காரை கடத்த முயன்றனர். கிராமத்தினர் கூடியதால், மூவரும் தப்பி ஓடினர். புகாரின்படி, இன்ஸ்பெக்டர் குமரேசன், எஸ்.ஐ., பெரியசாமி விசாரித்தனர். டிரைவரின் போனில் பேசிய ராஜாவின் எண்ணை தொடர்பு கொண்டு, மூவரையும் கைது செய்தனர்.


