Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாற்று இடம் வழங்க நில அளவை பணி :புலிகள் காப்பக கள இயக்குனர் நேரில் ஆய்வு

மாற்று இடம் வழங்க நில அளவை பணி :புலிகள் காப்பக கள இயக்குனர் நேரில் ஆய்வு

மாற்று இடம் வழங்க நில அளவை பணி :புலிகள் காப்பக கள இயக்குனர் நேரில் ஆய்வு

மாற்று இடம் வழங்க நில அளவை பணி :புலிகள் காப்பக கள இயக்குனர் நேரில் ஆய்வு

ADDED : ஆக 26, 2011 12:09 AM


Google News
பந்தலூர் : முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் குடியிருப்போருக்கான மாற்று இடம் வழங்குவது குறித்த நில அளவை பணியை காப்பக கள இயக்குனர் ஆய்வு செய்தார்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முதுமலை, நாகம்பள்ளி, பென்னை, காப்புக்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும் மக்கள், வன சட்டத்தின் காரணமாக தங்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றிட இயலாத நிலையில், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிட உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இவர்களுக்கான மாற்றிடம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி அருகே சன்னக்கொல்லி பகுதியில் தேர்வு செய்யப்பட்டது. மூன்று புல எண்களுக்குட்பட்ட பகுதிகளில் 488 எக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் அளவை செய்யும் பணி கடந்த ஒரு ஆண்டாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பந்தலூர் வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நில அளவை பணிக்கு போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையில், தற்போது 80சதவீதம் அளவிற்கு அளவை பணிகள் நிறைவுபெற்றுள்ளது. 'புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் வரத்து அதிகரித்துள்ளதாலும், குடியிருப்புகள் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளதாலும், விரைவாக அளவை பணியை முடித்து தங்களுக்குரிய நிலத்தை வழங்க வேண்டும்,' என பயனாளிகள் கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள புலிகள் காப்பக கள இயக்குனர் ரகுராம் சிங் நில அளவை பணியை பார்வையிட்டு, புதிதாக ஆக்கிரமிப்புகள் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். 'ஆய்வு பணிகள் விரைவாக நிறைவு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு இடம் வழங்கப்படும்; நில அளவை செய்த பகுதிகளில் புதிதாக ஆக்கிரமிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்,' எனவும் அவர் அறிவுருத்தினார். ஆய்வின் போது, கூடலூர் வன அலுவலர் தீபக்பெல்ஜி, காப்பக உதவி கள இயக்குனர் அமீர் ஹாஜா, வன சரகர்கள் குட்டன், இளஞ்சேரன், வனவர் செல்வராஜ், சர்வேயர் சேவியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us