/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சாலை பணியாளர்கள் மறியல் திருக்கோவிலூரில் டிராபிக் ஜாம்சாலை பணியாளர்கள் மறியல் திருக்கோவிலூரில் டிராபிக் ஜாம்
சாலை பணியாளர்கள் மறியல் திருக்கோவிலூரில் டிராபிக் ஜாம்
சாலை பணியாளர்கள் மறியல் திருக்கோவிலூரில் டிராபிக் ஜாம்
சாலை பணியாளர்கள் மறியல் திருக்கோவிலூரில் டிராபிக் ஜாம்
ADDED : ஆக 29, 2011 10:27 PM
திருக்கோவிலூர் : விபத்தில் இறந்த சாலை பணியாளரின் உடல் பிரேத பரிசோதனை செய்ய காலதாமதமானதால் திருக்கோவிலூரில் சாலை மறியல் நடந்தது.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மண்டகமேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். சாலை பணியாளர். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி ரேணுகாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் இருவரும் பரிதாபமாக இறந் னர். இவர்களது உடல்கள் பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் 1 மணி வரை பிரேத பரிசோதனை செய்ய அரசு டாக்டர்கள் யாரும் வராததால் உறவினர்கள் அதிருப்தியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் திருக்கோவிலூர் நான்குமுனை ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை மார்க் கத்தில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.


