ADDED : செப் 07, 2011 01:51 AM
கோபிசெட்டிபாளையம்: தீ விபத்தில் மூதாட்டி காயம் அடைந்தார்; 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன.
கோபி புதுப்பாளையம் பஜனை கோவில் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் தவசியப்பன்(60); பெயின்டர். இவரது மனைவி முத்துலட்சுமி (58), நேற்று மதியம் வீட்டில் சமையல் செய்தார். அப்போது, ஏற்பட்ட த தீவிபத்தில், குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. கோபி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். தீக்காயம் அடைந்த முத்துலட்சுமி, கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தீ விபத்தில் வீட்டில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.


