ADDED : செப் 08, 2011 11:52 PM
உளுந்தூர்பேட்டை : காதலித்த பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை ஊ.கீரனூர் காலனியைச் சேர்ந்த ராமன் மகள் ஜானகி,20. அதே பகுதியைச் சேர்ந்த வீரமுத்து மகன் அய்யப்பன்,23. இருவரிடையே காதல் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில், அய்யப்பனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த ஜானகி தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டு, திருமணம் ஏற்பாடு நிறுத்தப்பட்டது. புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்தனர்.


