/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கொடிக்குறிச்சி பள்ளி மாணவிகள் சாதனைகொடிக்குறிச்சி பள்ளி மாணவிகள் சாதனை
கொடிக்குறிச்சி பள்ளி மாணவிகள் சாதனை
கொடிக்குறிச்சி பள்ளி மாணவிகள் சாதனை
கொடிக்குறிச்சி பள்ளி மாணவிகள் சாதனை
ADDED : செப் 13, 2011 12:21 AM
சுரண்டை : கொடிக்குறிச்சி யு.எஸ்.பி.
மெட்ரிக் பள்ளி மாணவிகள் பேச்சுப் போட்டியில் சாதனை படைத்தனர். சுரண்டை மகாத்மா காந்தி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் 4வது ஆண்டு விழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கிடையேயான ஆசிரியர் தினவிழா மற்றும் கலை விழா போட்டிகள் சுரண்டை பராசக்தி பள்ளியில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் முருகையா, முத்துலெட்சுமி கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பேச்சுப் போட்டியில் யு.எஸ்.பி.மெட்ரிக் பள்ளி மாணவி ஹில்லேலா 2ம் இடமும், உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவி நித்தியா 2ம் இடமும், நடுநிலைப்பள்ளி அளவில் மாணவி ஆண்டோ பிரியதர்ஷினி 3ம் இடமும், தொடக்கப்பள்ளி அளவில் மாணவி பூர்ணிமா 3ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் செல்வராஜ், டிரெஸ்டி சகாய செல்வமேரி மற்றும் பள்ளி முதல்வர் விவேகானந்தன், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.


