Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு தீவிரம் : அமைதியான உள்ளாட்சி தேர்தலுக்கு நடவடிக்கை

மதுரையில் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு தீவிரம் : அமைதியான உள்ளாட்சி தேர்தலுக்கு நடவடிக்கை

மதுரையில் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு தீவிரம் : அமைதியான உள்ளாட்சி தேர்தலுக்கு நடவடிக்கை

மதுரையில் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு தீவிரம் : அமைதியான உள்ளாட்சி தேர்தலுக்கு நடவடிக்கை

ADDED : செப் 13, 2011 12:34 AM


Google News

மதுரை : மதுரையில் உள்ளாட்சி தேர்தலை வன்முறையின்றி அமைதியாக நடத்தி முடிக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி போலீசாருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதன் முன்னேற்பாடாக ரவுடிகள் பட்டியல் தயாரிப்பில் போலீசார் தீவிரமாக உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தலை சீர்குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகளை கூண்டோடு கைது செய்ய போலீசாருக்கு அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. கடந்த தேர்தல்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் பட்டியல் தயாரித்து வருகின்றனர். அவர்களில் அரசியல் கட்சிகள் சார்ந்த ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் குறித்து போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.



மதுரை நகரில் 25 ரவுடிகளும், புறநகரில் 102 ரவுடிகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களை தவிர வழக்குகள் தொடர்பாக 155 ரவுடிகள் மதுரை, திருச்சி, பாளை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் விடுதலையாகி வெளியே வருபவர்களை போலீசார் கண்காணிக்க உள்ளனர். இவர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவது தெரிந்தால் மீண்டும் கைது செய்யப்பட்டு, 'குண்டர்' சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர். ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுக்கும் வகையில் உதவ முன் வருவோரும் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது. தவிர ஓட்டுப்பதிவுக்கு முந்தைய ஓரிரு நாட்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வன்முறையாளர்களை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us