காங்கிரஸ் எம்.பி., பயணித்த ரயில் பெட்டியில் 10 லட்சம் ரூபாயுடன் பணப்பை கண்டுபிடிப்பு
காங்கிரஸ் எம்.பி., பயணித்த ரயில் பெட்டியில் 10 லட்சம் ரூபாயுடன் பணப்பை கண்டுபிடிப்பு
காங்கிரஸ் எம்.பி., பயணித்த ரயில் பெட்டியில் 10 லட்சம் ரூபாயுடன் பணப்பை கண்டுபிடிப்பு
ADDED : செப் 16, 2011 12:17 AM
போபால்: டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான சந்தீப் தீட்ஷித் பயணம் செய்த ரயில் பெட்டியில், பத்து லட்சம் ரொக்கத்துடன் கூடிய, பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மகன், சந்தீப் தீட்ஷித். காங்கிரஸ் எம்.பி.,யாக உள்ளார். இவர், டில்லியிலிருந்து, மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு, போபால் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பயணித்தார். 'ஏசி' வகுப்பு பெட்டியில் இவர் பயணித்தார். போபால் ரயில்வே ஸ்டேஷனுக்கு அந்த ரயில் வந்தபோது, 'ஏசி' வகுப்பு பெட்டியில், சந்தே கத்துக்கிடமான முறையில், ஒரு பை கிடந்ததை, ரயில்வே ஊழியர் ஒருவர் கண்டு பிடித்தார். அந்த பையைச் சோதனையிட்டபோது, அதில் 10 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பையை, ரயில்வே போலீசாரிடம், அவர் ஒப்படைத்தார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''இந்த பை, தீட்ஷித்துக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று தான், அனைவரும் கருதினர். ஆனால், அந்த பைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, தீட்ஷித் கூறி விட்டார். இதனால், பையும், அதில் உள்ள பணமும், யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர். இதற்கிடையே, இந்த பை, தன் நண்பருக்கு சொந்தமானது என்றும், நிலம் வாங்குவதற்காக, அந்த பையில் அவர் பணம் வைத்திருந்தார் என்றும், ரயில்வே போலீசாரிடம், தீட்ஷித் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.


