குருவாயூர் புதிய மேல்சாந்தி தேர்வு:ஆறு மாதங்களுக்கு பதவி வகிப்பார்
குருவாயூர் புதிய மேல்சாந்தி தேர்வு:ஆறு மாதங்களுக்கு பதவி வகிப்பார்
குருவாயூர் புதிய மேல்சாந்தி தேர்வு:ஆறு மாதங்களுக்கு பதவி வகிப்பார்

குருவாயூர்:குருவாயூர் கிருஷ்ணன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக கிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நிகழ்ச்சியில், 51 பேர்களின் பெயர் எழுதப்பட்ட சீட்டுக்களில் ஒன்றை, தற்போது கோவிலின் மேல்சாந்தியாக உள்ள கிரீசன் நம்பூதிரி எடுத்தார். குலுக்கலில், கூற்றநாடு பாவன்னூர் பகுதியைச் சேர்ந்த பொட்டக்குழி மனயிக்கல் கிருஷ்ணன் நம்பூதிரி, 36, தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன், 1968 மற்றும் 1976ம் ஆண்டுகளில் குருவாயூர் கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றிய நீலகண்டன் நம்பூதிரியின் மகன். இவர் மேல்சாந்தி பதவிக்காக இரு முறை விண்ணப்பித்தும் தேர்வாகவில்லை.புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், அடுத்த 12 தினங்கள் கோவிலில் பஜனைக்காக தங்கி இருப்பார். வரும் 30ம் தேதி இரவு அத்தாழ பூஜை (ராக்கால பூஜை)க்குப் பின், புதிய பதவி ஏற்பார். இவர் தன் பதவிக்காலம் முழுவதும் கோவிலை விட்டு வெளியே எங்கும் செல்லாமல், கோவிலுக்கு உள்ளேயே தங்கி, பூஜை, புனஸ்காரங்களை நிர்வகிப்பார்.