/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சாஸ்தா கோயில் அணையில் குவாரி:முறை தவறி மணல் அள்ளுவதால் பாதிப்புசாஸ்தா கோயில் அணையில் குவாரி:முறை தவறி மணல் அள்ளுவதால் பாதிப்பு
சாஸ்தா கோயில் அணையில் குவாரி:முறை தவறி மணல் அள்ளுவதால் பாதிப்பு
சாஸ்தா கோயில் அணையில் குவாரி:முறை தவறி மணல் அள்ளுவதால் பாதிப்பு
சாஸ்தா கோயில் அணையில் குவாரி:முறை தவறி மணல் அள்ளுவதால் பாதிப்பு
ADDED : செப் 26, 2011 10:00 PM
தளவாய்புரம்:'தேவதானம் அருகே நகரி ஆற்றின் குறுக்கே சாஸ்தா கோயில் அணையில் குவாரி அமைத்து, முறைதவறி மணல் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கிறது.
சாஸ்தாகோயில் அணை பகுதியில் கடந்த 5ம் தேதி முதல் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டும் மணல் அள்ளி விற்பனை செய்ய பொதுப்பணித்துறைக்கு அரசு அனுமதி வழங்கியது. 'தண்ணீர் செல்லும் பாதையில் மண் அள்ள கூடாது, அணையின் கரைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மணல் அள்ளலாம். வாகனங்களில் குறிப்பிட்ட அளவு மணல் மட்டுமே எடுக்கவேண்டும், பொக்லைன் இயந்திரம் பயன்படுத்த கூடாது, காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மணல் அள்ளவேண்டும்,' என, விதிகள் உள்ளன.
மணல் அள்ளுபவர்கள், அணையின் தண்ணீர் இருக்கும் பகுதி, கரை ஓரங்களில்ம் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மணல் அள்ளுகின்றனர். இதனால் மண் அள்ளும் வாகனங்கள் பள்ளத்தில் இருந்து வெளியே வரமுடியாத நிலை உள்ளது. இவற்றை பொக்லைன் மூலம் வெளியே எடுக்கும் சம்பவம் நடக்கிறது. மணல் அள்ளுபவர்கள் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜெயராஜ் கோரி உள்ளார்.இதுபோல்,தேவதானத்தில் மணல் அள்ளுவதை கண்டித்து, கிணற்றுபாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சார்பில் தட்டிபோர்டு வைக்கப்பட்டு உள்ளது.


