/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பெரியோர்களின் உபதேசத்தை மதிக்க வேண்டும் சாரதா ஆசிரம கொலு கண்காட்சியில் அறிவுரைபெரியோர்களின் உபதேசத்தை மதிக்க வேண்டும் சாரதா ஆசிரம கொலு கண்காட்சியில் அறிவுரை
பெரியோர்களின் உபதேசத்தை மதிக்க வேண்டும் சாரதா ஆசிரம கொலு கண்காட்சியில் அறிவுரை
பெரியோர்களின் உபதேசத்தை மதிக்க வேண்டும் சாரதா ஆசிரம கொலு கண்காட்சியில் அறிவுரை
பெரியோர்களின் உபதேசத்தை மதிக்க வேண்டும் சாரதா ஆசிரம கொலு கண்காட்சியில் அறிவுரை
ADDED : செப் 27, 2011 11:38 PM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது.துவக்க விழாவில் ஸ்ரீசாரதா ஆசிரம தலைமை மாதாஜி யதீஸ்வரி ராமகிருஷ்ணப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார்.
யதீஸ்வரி அனந்தபிரேமப்ரியா அம்பா வரவேற்றார். கல்வி குழும சீதாரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.பெரியோர்களின் உபதேசங்களை மதித்து நடப்பதால் ஏற்படும் நன்மைகள், அதனை புறந்தள்ளுவதால் விளையும் தீமைகள் மற்றும் பாகவதங்களை கேட்பதால் கிடைக்கும் புண்ணியத்தை விளக்குகின்ற வகையில் கொலு கண்காட்சி அமைக் கப்பட்டிருந்தது. இதனை வலியுறுத்தும் ஆத்மதேவன் புனித சரிதத்தை விளக்கும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. கொலு கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களிடம் நீதிபோதனைகளை மாணவ, மாணவிகள் எடுத்துரைத்தனர்.


