/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரூ.50 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல்: கார் டிரைவர் கைதுரூ.50 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல்: கார் டிரைவர் கைது
ரூ.50 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல்: கார் டிரைவர் கைது
ரூ.50 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல்: கார் டிரைவர் கைது
ரூ.50 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல்: கார் டிரைவர் கைது
ADDED : செப் 27, 2011 11:38 PM
செஞ்சி : மது பாட்டில்களை காரில் கடத்தி சென்ற வாலிபரை செஞ்சி போலீ சார் கைது செய்தனர்.செஞ்சி டி.எஸ்.பி., அலுவலகம் எதிரில் நேற்று அதிகாலை 4 மணிக்கு இன்ஸ்பெக்டர் ராமநாதன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ராஜேந்திரன், போலீசார் சுபாஷ், பிரகாஷ் உள்ளிட்டோர் வாகன சோதனை செய்தனர்.அந்த வழியே அம்பாசிடர் காரில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தி, தப்பி ஓடினர்.
கார் டிரைவர் கோபிநாத், 31 என்பவர் போலீசில் பிடிபட்டார். இவரிடம் விசாரித்ததில் கோபிநாத்தின் வாடகை காரில், திருவண்ணாமலை மாவட்டம் நவாப் பாளையத்தை சேர்ந்த மாணிக்கம், பழனி ஆகியோர் புதுச்சேரியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1,200 பிராந்தி பாட்டில்களை கடத்தியது தெரிய வந்தது. கோபிநாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


