Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை : "நாசா'வின் விண்கலம் கண்டுபிடிப்பு

விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை : "நாசா'வின் விண்கலம் கண்டுபிடிப்பு

விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை : "நாசா'வின் விண்கலம் கண்டுபிடிப்பு

விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை : "நாசா'வின் விண்கலம் கண்டுபிடிப்பு

ADDED : அக் 01, 2011 11:43 PM


Google News
Latest Tamil News
லாஸ் ஏஞ்சல்ஸ்: பூமிக்கு அருகில், சுற்றிக் கொண்டிருக்கும் விண்கற்களில், 90 சதவீதத்தை அமெரிக்காவின் 'நாசா' கண்டறிந்துள்ளது. மேலும், இந்த விண்கற்களால், பூமிக்கு ஆபத்தில்லை என்றும், 'நாசா' தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் 'நாசா' ஆய்வு மையம், 'வைஸ்' என்ற விண்கலம், 2009ல் ஏவப்பட்டது. பூமிக்கு வெகு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்கற்கள், கேலக்சிகள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வதற்காக, இது அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, அந்த விண்கலம், மொத்தம், 981 விண்கற்கள் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த 981 கற்களில், 911 கற்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டவை. இதற்கு முன்பு நடந்த ஆய்வுகளின்படி, 3,300 அடிக்கும் அதிகமான அகலம் கொண்ட, இந்த கற்கள் எந்நேரம் வேண்டுமானாலும், பூமியைத் தாக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 'வைஸ்' விண்கலம், இந்த விண்கற்களின் சுற்றுப் பாதைகளைக் கண்டறிந்துள்ளதால், இவற்றில் பெரும்பாலானவற்றால், பூமிக்கு ஆபத்து எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அதேநேரம், இதுவரை, 3.300 அடி அகலத்துக்கு குறைவாக நடுத்தர அளவுள்ள விண்கற்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றன எனக் கருதப்பட்டது. ஆனால், 330 அடியிலிருந்து, 3,300 அடி அகலம் வரையிலான 19,500 விண்கற்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பதையும் 'வைஸ்' கண்டறிந்துள்ளது. இவற்றில்,5,200 விண்கற்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டவை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us