/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/தி.பூண்டி நகராட்சி கவுன்சிலர் பதவி : பா.ஜ., வேட்பாளர் அதிரடி வாக்குறுதிதி.பூண்டி நகராட்சி கவுன்சிலர் பதவி : பா.ஜ., வேட்பாளர் அதிரடி வாக்குறுதி
தி.பூண்டி நகராட்சி கவுன்சிலர் பதவி : பா.ஜ., வேட்பாளர் அதிரடி வாக்குறுதி
தி.பூண்டி நகராட்சி கவுன்சிலர் பதவி : பா.ஜ., வேட்பாளர் அதிரடி வாக்குறுதி
தி.பூண்டி நகராட்சி கவுன்சிலர் பதவி : பா.ஜ., வேட்பாளர் அதிரடி வாக்குறுதி
ADDED : அக் 03, 2011 03:07 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும், இரண்டு பா.ஜ.,வினர் மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.
திருத்துறைப்பூண்டி நகராட்சி 9வது வார்டு பா.ஜ., வேட்பாளராக, நகரத்தலைவர் இளசுமணி, 17வது வார்டுக்கு சுகுணாவும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக டாக்டர் மணி, மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன், துணைத்தலைவர் சிவக்குமார், பொருளாளர் ஸ்ரீதரன், ஒன்றியத்தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோரை மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி நகராட்சி ஒன்பதாவது வார்டில் போட்டியிடும் இளசுமணி கூறியபோது, ''என்னை தேர்ந்தெடுத்தால், 9வது வார்டில், சுகாதாரத்தை சீரமைக்கவும், பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சுற்றியுள்ள நான்கு வீதிகளையும் தூய்மைப்படுத்துவதோடு, தெற்கு வீதியில் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.
நகராட்சி 17வது வார்டில் போட்டியிடும் சுகுணா கூறியபோது, ''என்னை வெற்றிப்பெறச் செய்தால், 17வது வார்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வைப்பேன். நாள்தோறும் துப்புரப்பணிகளை மேற்கொண்டு, குப்பைகள் இல்லாத வார்டாக 17வது வார்டை மாற்ற நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.


