தேர்தல் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
தேர்தல் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
தேர்தல் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
ADDED : அக் 03, 2011 11:01 PM
தேனி : உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகளை கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தேர்தல் பணிக்கும், ஓட்டுச்சாவடி பணிக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தெந்த ஓட்டுச்சாவடிக்கு யார் அதிகாரிகள் என்பது கடைசிலேயே தெரிய வரும். ஆனால் உள்ளாட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் ஓட்டுப்பதிவு நடக்கும் ஓட்டுச்சாவடி அதிகாரிகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகளை கண்காணிக்குமாறும், அவர்களை ஓட்டுச்சாவடி வாரியாக பிரிப்பதை சட்டசபை தேர்தல் போல், கடைசி நேரத்தில் செய்து கொள்ளுமாறும் தேர்தல் பிரிவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


