/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்
ADDED : அக் 04, 2011 10:29 PM
சிவகங்கை:மாவட்டத்தில் களத்தில் நிற்கும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கிராம
ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி: மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு
119 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் 5 பேர் மனுக்கள் தள்ளுபடியானது.
வாபஸ் பெற்றது 33 பேர். இறுதியாக 81 பேர் போட்டியிடுகின்றனர்.ஊராட்சி
ஒன்றியம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 12ன் கீழ் 161 ஒன்றிய வார்டு
கவுன்சிலர்கள் பதவிக்கு 1,083 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில்
26பேரின் மனுக்கள் தள்ளுபடியானது. 315 பேர் மனுக்களை வாபஸ் ஆனது. இறுதியாக
ஊராட்சி ஒன்றிய வார்டு பதவிக்கு 742 பேர் போட்டியிடுகின்றனர்.
கிராம
ஊராட்சிகள்: மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2,755 பேர்
வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், 32 பேரின் மனுக்கள் தள்ளுபடியானது.
1,058 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். கிராம ஊராட்சி தலைவர்கள் 14 பேர்
போட்டியின்றி தேர்வாகினர். தலைவர் பதவிக்கு 1651 பேர் போட்டியிடுகின்றனர்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான 3,126 பணியிடங்களுக்கு 7,368 பேர்
வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் 137 பேரின் மனு தள்ளுபடியானது.
1003 பேர் வாபஸ் பெற்றனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 1,248 பேர்
போட்டியின்றி தேர்வாகினர். இறுதியாக இப்பதவிக்கு 4,980 பேர்
போட்டியிடுகின்றனர்.


