ADDED : அக் 04, 2011 10:52 PM
போடி:போடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., தி.மு.க, உட்பட 18 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.வேட்பு மனு பரிசீலனையில் ஒரு மனு தள்ளுபடியானது.
6 பேர் வாபஸ் பெற்றனர்.பாலமுருகன்(அ.தி.மு.க.,), ரமேஷ்(தி.மு.க.,), கிருஷ்ணன்(தே.மு.தி.க.,), நவநீதன்(காங்.,), சந்திரசேகரன்(பா.ஜ.,) தங்கப்பாண்டி(பா.ம.க.,), சுயேட்சைகளாக பழனிராஜ், சரவணமூர்த்தி, செல்வம், சேதுராம், வெள்ளைச்சாமி உட்பட 11 பேர் போட்டியிடுகின்றனர்.


