ADDED : அக் 04, 2011 10:52 PM
தேவதானப்பட்டி:ஜி.கல்லுப்பட்டி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் முருகன், 25.
நேற்று முன்தினம் கெங்குவார்பட்டியில் இருந்து ஊருக்கு மணிவேல்
ஆட்டோவில்சென்றார்.
கல்லுப்பட்டியில் இருந்து கெங்குவார்பட்டிக்கு டிராக்டர் சென்றது. பள்ளி
அருகில் ஆட்டோவும், டிராக்டரும் மோதியது. முருகனுக்கு காயம் ஏற்பட்டு மதுரை
அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். நிவாரணம் கேட்டு உறவினர்கள்
ரோடு மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் ரத்தினம், இன்ஸ்பெக்டர் ராமநாதன்
பேச்சுவார்த்தை நடத்தினர். ரோடு மறியல் கைவிடப்பட்டது.


